Politics
“அர்ப்பணிப்புடன் கூடிய காவல் பணிக்கு சிறந்த முன்னுதாரணம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி” – அன்புமணி ராமதாஸ் பாராட்டு..!!
வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் மிகத் தீவிரமடைந்து வருகிறது.
மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
இந்நிலையில், டி.பி. சத்திரம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறையிலேயே நேற்றிரவு தங்கியுள்ளார்.
தொடர்ந்து மழையில் நனைந்து கொண்டும் இருந்துள்ளார். இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.
மேலும் பணியில் இருந்தபோது இவர் மீது மரம் விழுந்து, நிலைகுலைந்து கல்லறையிலேயே சாய்ந்து விழுந்துள்ளார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஊழியர் உதயாவை தன்னுடைய தோளில் தூக்கிக் கொண்டு நடந்து வந்து, ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
உதயாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அர்ப்பணிப்புடன் கூடிய காவல் பணிக்கு சிறந்த முன்னுதாரணம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை டி.பி.சத்திரத்தில் மரம் முறிந்ததில் இறந்து விட்டதாக கருதப்பட்டவரை, வெற்றுக் கால்களுடன் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றிய அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள்.
சினிமாவில் பலர் ரீல் ஹீரோ களத்தில் இவர் ரியல் ஹீரோ.
ஆய்வாளர் ராஜேஸ்வரி வட சென்னையில் பல இடங்களில் பணியாற்றிய போது அவர் ஆற்றிய மக்கள் நலப் பணிகளையும், கொடிய கு.ற்ற.வா.ளியை கைது செய்ததற்காக வீரதீர பதக்கம் பெற்றவர் என்பதையும் நான் அறிவேன்.
அர்ப்பணிப்புடன் கூடிய காவல் பணிக்கு அவர் சிறந்த முன்னுதாரணம்” என்று தெரிவித்தார்
