Viral News
“அவன் என் ஆளுடி; அவன்ட நீ பேசக்கூடாது” -ஒரு மாணவனுக்காக இரண்டு மாணவிகள் நடுரோட்டில் தலைமுடியை பிடித்து கொண்டு சண்டையிட்ட கொடுமை; அதிர்ச்சியில் போலீசார்…!!
ஒரு பெண்ணிற்காக இரண்டு ஆண்கள் சண்டை போட்டு கொள்ளும் சம்பவம் உலகம் முழுவதும் நடைபெறுகிறது.
ஆனால் ஒரு ஆணுக்காக இரண்டு மாணவிகள் தெருவில் இறங்கி முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டு கொண்ட இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாக்கப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனகாப்பல்லி பகுதியில் வசிக்கும் மாணவர் ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் இரண்டு பள்ளி மாணவிகளை காதலித்து வந்து உள்ளார்.
அந்த மாணவிகள் வெவ்வேறு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிப்பவர்கள் ஆவர்.
இதனிடையே, கடந்த புதன்கிழமை காலை மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்வதற்காக விசாகப்பட்டினம் ஆர்.டி.சி பேருந்து நிலையத்தில் வந்தனர்.
அப்போது 2 பள்ளி மாணவிகள் மாறி, மாறி திட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கு அருகில் ஒரு பள்ளி மாணவன் நின்று கொண்டிருந்தார்.
இரு மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் முற்றியதால், சுற்றி இருந்த சக மாணவர்கள் அங்கு என்னதான் நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தனர்.
ஒரு கட்டத்தில் அந்த பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு, ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இரு மாணவிகளும் காதல் விவகாரத்தால் மோதிக் கொண்டதால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு வந்த காவல்துறையினர் 2 மாணவிகளையும், அந்த மாணவனையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது விசாகப்பட்டினம் அனகாபள்ளி பகுதி சார்ந்த மாணவன் ஒரே நேரத்தில் வெவ்வேறு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 2 மாணவியை காதலித்து வந்தது தெரிய வந்தது.
அந்த மாணவன் காதலி ஒருவருடன் சாலையில் நடந்து செல்வதை பார்த்த மற்றொரு காதலி அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
