Tamil News
ஆத்திரத்தில் வெங்காயத்தை தீ வைத்து எரித்த விவசாயி; என்ன காரணம் தெரியுமா..??
ஆந்திர மாநிலம் கர்னூலில் வெங்காயத்துக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயி வெங்காயத்தை தீ வைத்து எரித்தார்.
ஆந்திர மாநிலம்
கர்னூரிலுள்ள விளைபொருள் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெங்காயத்தை விற்பனை செய்ய வந்திருந்தனர்.
அப்போது, ஒரு குவிண்டால் வெங்காயத்திற்கு 350 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என வியாபாரிகள் கூறினர்.
இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
இதில் ஆத்திரமடைந்த விவசாயி ஒருவர் தாம் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த வெங்காயத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.
மற்ற விவசாயிகளும் இதேபோன்று தீ வைத்து கொளுத்துவோம் எனக் கூறவே, விவசாயிகளை சமாதானம் செய்த அதிகாரிகள், 700ரூபாய் வாங்கித் தருவதாக உறுதியளித்தனர்.
இதனை அடுத்து, வியாபாரிகளும் ஏற்றுக் கொண்டு குவிண்டால் வெங்காயத்தை 700ரூபாய்க்கு எடுத்துக் கொண்டனர்.
இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
