Connect with us

    ஆன்லைன் திருமணம்; பொண்ணு இங்கே! மாப்பிள்ளை அங்கே!!- வித்தியாசமாக நடைபெற்ற திருமணம்; எங்கு தெரியுமா??

    Viral News

    ஆன்லைன் திருமணம்; பொண்ணு இங்கே! மாப்பிள்ளை அங்கே!!- வித்தியாசமாக நடைபெற்ற திருமணம்; எங்கு தெரியுமா??

    கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் உக்ரைனில் வசிக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை அடுத்த புனலூர் பகுதியை சேர்ந்த ஜீவன் குமார் என்பவருக்கும், திருவனந்தபுரம் கழக்கூட்டத்து பகுதியை சேர்ந்த தன்யா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்யப்பட்டது.

    இந்தநிலையில், பணி காரணமாக உக்ரைன் நாட்டிற்கு சென்ற ஜீவன் குமார் கொரோனா பரவல் காரணமாக திருமணம் நடைபெற இருந்த நாள் அன்று வரமுடியவில்லை.

    ஏற்கனவே, இவர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் புனலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் இருவருக்கும் திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று எண்ணி, இருவரும் ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதிக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தொடர்ந்தனர்.

    வ.ழக்.கை விசாரித்த நீதிபதிகள் ஆன்லைன் மூலமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தனர்.

    இதையடுத்து, நேற்று புனலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு , இரு வீட்டார் முன்னிலையில் ஆன்லைன் காணொலி காட்சி மூலமாக உக்ரைன் நாட்டில் இருந்து ஜீவன் குமார் தன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

    அதற்கான திருமண சான்றிதழை சார் பதிவாளர் டி.எம்.பிரோஸ் வழங்கினார்.

    தற்போது ஆன்லைன் வாயிலாக நடந்த இந்த திருமணம் குறித்த தகவல் நாடு முழுவதும் பரவி வை.ரலாகி வருகிறது

    Continue Reading
    To Top
    error: Content is protected !!