Viral News
இறந்த பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய இளைஞர்; வைரலாகும் வீடியோ…!!
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.
ஆனால், இங்கு ஒரு இளைஞர் செத்த பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
25 வயது மதிக்கத்தக்க
இளைஞர் ஒருவர் குப்பைகளை கொட்டும் பகுதியில் நின்று கொண்டு பாம்பினை தனது இரண்டு கைகளால் பிடித்து கொண்டு ஸ்கிப்பிங் ஆடுகிறார்.
இறுதியாக குப்பைகள் இருக்கும் பகுதிகள் நோக்கி நகர்ந்து செல்கின்றார்.
ஸ்கிப்பிங் விளையாடி விட்டுப் பின்னர் அந்த பாம்பை தூக்கி எறிகிறார்.
இந்த வீடியோவை சிலர் எடுத்து இணையத்தில் விட தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் பாம்பு இறந்த நிலையில் உள்ளது.
ஒரு இறந்த பாம்பை அது செத்த பிறகும் கூட இப்படி எல்லாம் துன்புறுத்தலாமா? என்று பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
