Politics
உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்த புதிய பதவி – சட்டப்பேரவையில் அறிவிப்பு..!!
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், பேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வரின் அறிவிப்புகள், மசோதாக்கள் நிறைவேற்றம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இன்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுவார் என அவர் தெரிவித்தார்.
அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச் செல்வனும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பேரவைத் தலைவர் அறிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி வழங்கப்பட்டது திமுக கட்சி தொண்டர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
