Tamil News
“உன் பொண்டாட்டிய என்கூட அனுப்பி வைக்கிறியா; இல்ல, ஆசிட் ஊத்தட்டுமா” – மிரட்டிய கள்ளக்காதலன்; அதிர்ந்த ஒரிஜினல் கணவர்; அதன்பின் நடந்த விபரீதம்…!!
சென்னை, கொருக்குப்பேட்டை, ரங்க நாதபுரம், அவுசிங் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரின் மனைவி ஜானகி (24).
இந்த தம்பதியருக்கு
இரண்டு குழந்தைகள் உள்ளன.
பழனிச்சாமி எம்.சி ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கொருக்குப்பேட்டை, ராதாகிருஷ்ணன் நகர், முதல் தெருவை சேர்ந்த சுரேஷ் பாபு. இவரின் மகன் வினோத் (33).
இவருக்கும் ஜானகிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களின் கள்ளக்காதலை அறிந்த ஜானகியின் கணவர் பழனிச்சாமி இருவரையும் கண்டித்துள்ளார்.
இதனால் கள்ளக்காதல் ஜோடி பழையபடி சந்திக்க முடியாமல் தவித்து வந்தனர்.
இதனால் ஜானகி தனது கணவரை விட்டு பிரிந்து வினோத்துடன் சில மாதங்களுக்கு முன் சென்று விட்டார்.
இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கள் உல்லாச வாழ்க்கையை தொடர்ந்தனர்.
நாளடைவில் ஜானகி மீது வினோத்திற்கு வெறுப்பு தட்ட துவங்கியது.
இதனால் அவர் வேறு பெண்களை நாட துவங்கினார்.
இந்நிலையில், வினோத்தின் நடவடிக்கை பிடிக்காமல், ஜானகி, கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர், தான் திருந்தி விட்டதாக கூறி, கணவரிடம் திரும்பி வந்தார், கணவரும்
மனம் திருந்தி வந்த மனைவியை தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏற்றுக்கொண்டார்.
ஜானகி தன்னை விட்டு செல்வார் என சிறிதும் எதிர்பார்க்காத வினோத் அதிர்ச்சியடைந்தார்.
இந்த நிலையில், வினோத், தான் தனிமையில் இருந்த சில ஆ.பாச காட்சிகளை, பழனிசாமியின் செல்போனுக்கு அனுப்பி, உன் மனைவி ஜானகியை என்னுடன் அனுப்பிவை என மிரட்டியுள்ளார்.
மேலும், பழனிசாமியின் வீட்டுக்கு சென்று, அவரது மனைவி ஜானகியின் கையைப்பிடித்து இழுத்து, தன்னுடன் வரவில்லை என்றால். முகத்தில் ஆ.சிட் வீசுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால், தனது கணவர் அறிவுரையின்படி கொருக்குப்பேட்டை போலீசில் ஜானகி புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில், கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வினோத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,
