Tamil News
உறவுக்கார பெண்ணுடன் உல்லாசம்; தட்டிக் கேட்ட மனைவிக்கு நேர்ந்த சோகம்; கதறி அழுத பெண்ணின் பெற்றோர்..!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குடி கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணி(50), சரோஜா(48) தம்பதிகளின் மூத்த மகன் கோபிநாத்(26).
கார்பெண்டர் வேலை பார்த்து வரும் இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மலைக்குடிப்பட்டியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ஈஸ்வரியின் 3 வது பெண்ணான போதும்பொண்னை(19) கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் கல்குடியில் வசித்துவந்தனர்.
வயல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் படுக்கை அறையில் தனது கணவர் கோபிநாத், உறவுக்கார பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் கண்ட போதும்பொண்ணு, இதுபற்றி கோபிநாத்திடம் கேட்டபோது அவர் போதுபொண்ணுவை அ.டித்து உ.தைத்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தனது தாய் தந்தையிடமும் உன் வீட்டாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மீறி சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்றும் கோபிநாத் மிரட்டியுள்ளார்.
ஒரு மாதத்திற்கு பிறகு தனது தாய் வீட்டுக்கு வந்தபோது இச்சம்பவம் பற்றி தனது தாய் ஈஸ்வரியிடம் போதும்பொண்ணுவிடம் சொல்லி அழுது புலம்பியுள்ளார்.
இதைக் கேட்ட தாய் ஈஸ்வரி கல்குடியிலுள்ள கோபிநாத்தின் தாய், தந்தையரிடம் இதுகுறித்து கேட்டதற்கு அவர்கள் இனிமேல் இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்கிறோம் என்று உறுதி அளித்ததன் பேரில் போதும்பொண்ணு தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறி கல்குடிக்குச் சென்றுள்ளார்.
ஆனால் ருசி கண்ட பூனை விடாது என்பது போல கோபிநாத் தனது உறவுக்கார பெண்ணுடன் உ.ல்லா.சத்தை தொடர்ந்து வந்துள்ளார்.
இதைப் பற்றிக் கேட்டால் குடித்து விட்டு வந்து தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
திருமணம் முடிந்து முதல் தீபாவளிக்கு கூட அவரது தாய் வீட்டிற்கு கூட போகக்கூடாது அங்கு சென்றால் தன்னைப்பற்றி மீண்டும் அவர்களிடம் சொல்லி விடுவார் என்று தீபாவளிக்கு கூட போதும்பொண்ணுவை கோபிநாத் அழைத்துச் செல்லவில்லையாம்.
கோபிநாத் தனது கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்ததால், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மாமனார், மாமியரான சுப்பிரமணி, சரோஜாவிடம் இதைப்பற்றி கூறியுள்ளார் போதும்பொண்ணு.
ஆனால் அவர்களோ போதும்பொண்ணுவிடம் தனது மகன் இப்படித்தான் இருப்பான் விருப்பமிருந்தால் அவனுடன் சேர்ந்து வாழ் இல்லை என்றால் செத்துப்போ என்று கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த போதும்பொண்ணு கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்த எ.லி ம.ருந்தைசா.ப்பிட்டு த.ற்கொ.லை செய்துகொண்டார்.
இது குறித்து விராலிமலை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோபிநாத், சுப்பிரமணி மற்றும் சரோஜா ஆகியோர் போதும்பொண்ணுவை த.ற்கொ.லைக்கு தூண்டியது உறுதியானது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், சி.றை.யில் அடைத்தனர்.
