Politics
“எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எங்க நிலைமை மாறவேயில்லை” – முதல்வரை சந்தித்த பின் திருமாவளவன் வேதனை..!!
சேலம் மாவட்டத்தில் மோரூர் பகுதியில் திமுக, அதிமுக, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகளின் ,இயக்கத்தின் கொடிக்கம்பங்கள் இருக்கும் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் தங்களது கட்சி சார்பில் கொடிக்கம்பத்தை நட முயற்சி செய்தனர் .
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் புதிதாக எந்த கொடிக்கம்பமும் நடக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் முடிவு எடுத்திருப்பதாக த.டைவிதிக்கப்பட்டது.
இதனால் திருமாவளவன் நேரில் வந்து கொடி ஏற்றப்படும் அந்த நிகழ்வுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடையை மீறி அங்கு கொடி ஏற்ற முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் இருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் த.டிய.டி நடத்தினர். அப்போது க.ல்வீ.ச்சு சம்பவமும் அரங்கேறியது.
இதனை க.ண்டி.த்து திருமாவளவன் க.ண்டன ஆ.ர்ப்.பாட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருந்தார்.
திமுக கூட்டணியில் இருந்தும் விசிகவுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று விசிகவை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் திருமாவளவன்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மோரூரில் நடந்த வ.ன்மு.றை குறித்துப் பேச முதலமைச்சர் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதனால் அவரை நேரில் சந்தித்து பேசினோம். அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதல்வர் இதை குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பல கட்சிகளின் கொடிகள் பறக்கின்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி பறக்க மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது.
எந்த ஆட்சியாக இருந்தாலும் இதுபோன்று நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது என ஆவேசப்பட்டார்.
