Viral News
ஒரு விஏஓ -வின் பிறந்த நாளை ஒரு கிராமமே சேர்ந்து ஆடிப்பாடி பரிசுப்பொருட்கள் வழங்கி கொண்டாடினர்; ஏன் தெரியுமா..???
தஞ்சாவூர் அருகே வல்லம்புதூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றுபவர் பி. செந்தில் குமார் (46).
இவர் இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்றபின், கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
கிராமத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான சான்றிதழ்களை உரிய நேரத்தில் வழங்குவது, கிராம மக்களிடம் எளிதில் பழகுவது, அவர்களை அலைக்கழிக்காமல் உரிய சேவைகளை வழங்குவது, கஜா புயல், கரோனா நிவாரணப் பொருள்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்குவது, ஓய்வூதியம் பெரும் முதியோருக்கு தன்னுடைய செலவில் அரிசி வழங்குவது என ஒரு கிராம நிர்வாக அலுவலரின் பணியையும் தாண்டி மக்களுக்கு சேவை செய்துவருகிறார்.
மனிதாபிமானத்தோடு இவர் செய்யும் செயல்கள் அக்கிராம மக்களுக்கு பெரிதும் மகிழ்வைத் தந்தது.
இந்த கிராமத்துக்கு பணிபுரியவந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்ததால், அவருடைய பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாட அக்கிராம மக்கள் தீர்மானித்தனர்.
அதன்படி அவரது பிறந்த நாளான ஜூலை 7-ம் தேதி மாலை குருவாடிப்பட்டி கிராம மக்கள் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து கேக் வெட்டி, செந்தில் குமாரை வாழ்த்தி கும்மியடித்துப் பாடி கொண்டாடினர்.
அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து கேக் வெட்டி, செந்தில் குமாரை வாழ்த்தி கும்மியடித்துப் பாடி கொண்டாடினர்.
