Viral News
காதலியுடன் உல்லாசமாக இருக்க, காதலி வீட்டுக்கு வந்த இளைஞரை மடக்கி பிடித்து தாலி கட்ட வைத்த மணமகளின் உறவினர்கள்; திருமணம் முடிந்த பின் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்; ஏன் தெரியுமா???
கவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர், கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் வசித்து வருகிறார்.
இவரது தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவரது தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவருடன் சென்றுவிட்டார்.
இதனால், தனக்கென்று யாரும் இல்லாமல் அனாதையாக வாழ்ந்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், அத்தை, மாமாவின் பாதுகாப்பில் வசித்த இவர், வருமானத்திற்காக கும்பகோணத்தில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டர் ஒருவரிடம் வேலை செய்து வந்துள்ளார்.
கவி வேலை செய்து வரும் இடத்தில், தியாகராஜன் என்ற நபர் ஒருவர் அடிக்கடி வேலை காரணமாக வந்து சென்றுள்ளார்.
கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவை சேர்ந்த தியாகராஜனும், கவியும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
மேலும், இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.
இந்தசூழலில் ஒரு வருடத்திற்கு முன்பு தியாகராஜன், தனக்கு சென்னையில் வேலை கிடைத்துள்ளதாகவும், அங்கு சென்று வேலை நிரந்தரமானவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும், கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
ஆனால், நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை என அடிக்கடி கும்பகோணத்திற்கு வந்து கவியுடன் தனிமையில் இருந்துவிட்டு சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் சிலநாட்களுக்கு முன்பு கவியைச் சந்திக்க வந்த தியாகராஜனின் செல்போனை எதேச்சையாக பார்த்த கவிக்கு பேரதிர்ச்சி ஏற்படுள்ளது.
காரணம், தியாகராஜன் பல பெண்களுடன் தனிமையில் இருப்பது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும், எஸ்.எம்.எஸ்.களும் அவரது செல்போனில் இருந்திருக்கிறது.
இதுகுறித்து கவி, தியாகராஜனிடம் கேட்க, பதில் கூறாமல் சென்றிருக்கிறார்.
அதுமட்டுமின்றி அந்த சம்பவத்திற்கு பின் கவியைச் சந்திப்பதை தியாகராஜன் தவிர்த்திருக்கிறார்.
ஆனாலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கவி, தியாகராஜனைச் சந்தித்து தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் கோபமான தியாகராஜன் “உன்னமாதிரி எத்தனையோ பெண்களோடு சுகமா வாழ்ந்திருக்கேன், அத்தனைபேரையுமா திருமணம் செய்துக்க முடியும்” என கூறியதோடு, “உன்னுடன் சேர்ந்து இருக்கும் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டா உன் நிலமை என்னாகும்னு யோசித்து முடிவெடு” என கவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
கவியும் செய்வதறியாமல், தனக்கு நடந்ததை அவரின் அத்தை, மாமா உள்ளிட்டவர்களிடமும் சொல்லாமல், தியாகராஜனிடமும் பேசாமலும் இருந்து வந்திருக்கிறார்.
ஆனாலும், சிலநாட்கள் கழித்து கவி வீட்டிற்கு வந்த தியாகராஜன், வீட்டில் யாரும் இல்லாததை யூகித்து கவியை சமாதானம் செய்வது போல் அவரிடம் பேசியும், தனிமையில் இருக்கவும் முயன்றுள்ளார்.
ஆனால், கவி அதற்கு இணங்காமல் விடாப்பிடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் கெஞ்சி அழுது புலம்பியுள்ளார்.
அந்த சமயத்தில் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த கவியின் அத்தை, இதனை பார்த்து கவியிடம் கேட்டிருக்கிறார்.
அதன்பிறகே நடந்தது அனைத்தையும் கூறியிருக்கிறார்.
அந்த சமயத்தில் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற தியாகராஜனை அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி விரட்டிப்பிடித்து தர்மஅடி கொடுத்ததோடு. அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு இழுத்துச்சென்று பட்டு வேட்டி வாங்கி வரச்செய்து சட்டை மாற்றிவிட்டு கவிக்கு மாலை மாற்றி தாலி கட்ட வைத்துள்ளனர்.
அதன்பின்னர் இருவரையும் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண்ணின் உறவினர்கள், இது குறித்து புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின்பேரில் போலீசார் தியாகராஜனை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
