Viral News
காதல் மனைவிக்காக வீடு கட்டி அங்கே மனைவியின் மெழுகுச் சிலை வைத்து புதுமனை புகுவிழா நடத்திய பாசக்கார கணவர்…!!
கர்நாடக மாநிலம் பெல்லாரி அடுத்த கோப்பல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீனிவாஸ் குப்தா என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு வி.ப.த்தில் உ.யி.ரி.ழந்த தனது மனைவியை மறக்காமல், அவர் மீதான அன்பை பறைசாற்றும் விதமாக , தான் புதிதாக கட்டியிருக்கும் வீட்டின் புதுமனைப் புகுவிழாவின்போது மனைவியின் மெழுகு சிலையை வைத்து தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.
கர்நாடகாவிலுள்ள கொப்பால் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான ஸ்ரீனிவாஸ் குப்தா, கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மனைவியின் க.டைசி ஆ.சையான கனவு இல்லத்தை கட்டிமுடித்து புதுமனை புகுவிழாவை கொண்டாடியுள்ளார்.
புதுவீட்டு விழாவிற்கு வருகைதந்த விருந்தினர்கள் அனைவரும் வரவேற்பறையை அடைந்தவுடனே திகைத்து போயினர்.
பங்களாவின் அழகைக் கண்டு அவர்கள் வியக்கவில்லை, வரவேற்பறையிலிருந்த இருக்கையில் தத்ரூபமாய் ஸ்ரீநிவாசின் மனைவியே அமர்ந்திருப்பது போன்ற சிலையை கண்டு ஆச்சரியத்தில் ஆ.ழ்ந்.துள்ளனர்.
இது பற்றி ஸ்ரீனிவாச குப்தா கூறுகையில்,
ஆந்திரா பாக்யநகரில் ஒரு புதிய வீடு கட்டவேண்டும் என்பது அவளுடைய க.டைசி வி.ரு.ப்பமாக இருந்தது.
நிலத்தில் பூமி பூஜை விழா நடைபெற்றபோது ஒரு வி.ப.த்.தில் நாங்கள் அவளை இ.ழ.ந்.துவிட்டோம். ஆனால், புதுமனை விழாவின் போது நாங்கள் அவளை மிஸ் பண்ண விரும்பவில்லை.
அவள் எங்களுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதற்காகவே பிரத்யேகமாக இந்த மெழுகு சிலையை உருவாக்கினோம் என்று கூறினார்.
