Sports News
குழந்தை பிறந்ததில் கூட இப்படி ஒரு அதிர்ஷ்டமா ? மூவர் ஐவரானோம் – மகிழ்ச்சியில் தினேஷ் கார்த்திக்..!!
இந்திய அணியின் வீரரும், தமிழக அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள், 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் கடைசியாக 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் விளையாடினார்.
அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத தினேஷ் கார்த்திக் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், தி 100 ஆகிய தொடர்களில் வர்ணனையாளராக பணிபுரிந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது டி20 உலகக் கோப்பையிலும் அவர் சில போட்டிகளில் வர்ணனை செய்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா திரும்பியுள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு தீபிகா பல்லிகலை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தினேஷ் கார்த்திக்கு தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
அதுவும் இரண்டுமே ஆண் குழந்தை என்பதனால் தற்போது தினேஷ் கார்த்திக் மற்றும் தீபிகா ஆகியோர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.
அதில், மூவர் ஐவராக மாறி உள்ளோம் என்று தனது செல்லப்பிராணியுடன் இரண்டு குழந்தைகள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது பெயரிட்ட தினேஷ் கார்த்திக் ஒரு மகனுக்கு கபீர் பல்லிகள் கார்த்திக், ஸியான் பல்லிகள் கார்த்திக் என பெயரிட்டுள்ளார்.
அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினேஷ் கார்த்திக், தீபிகா தம்பதிக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
