Viral News
சரளமாக ஆங்கிலத்தில் பேசும் பெண், பிச்சை எடுக்கும் அவலம்; இவரின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன தெரியுமா..??
தற்போது உ.பி மாநிலம் வாரணாசியில் இருந்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வாரணாசிக்கு அருகில் உள்ள அசிகாட் பகுதியில் ஸ்வாதி என்ற பெண் பிச்சை எடுத்து வருகிறார்.
ஆனால் அவர் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். மேலும் தான் ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி என்றும் கூறுகிறார்.
தான் தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்றும், தனது குடும்பம் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், தனக்கு முதல் குழந்தை பிறந்த போது, அவர் உடலின் வலது பக்கம் முழுவதும் செயலிழந்தால் எல்லாம் மாறவிட்டதாகவும் கூறுகிறார்.
பின்னர், தன்னை வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித்திரிந்து கடைசியில் வாரணாசிக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
சுவாதி கடந்த மூன்று வருடங்களாக அந்த நகரத்தில் வசித்து வருகிறார்.
வழிப்போக்கர்களிடமிருந்து வரும் உதவி தான் அவரின் ஒரே நம்பிக்கையாக உள்ளது.
தனது தோற்றத்தால் தன்னை மனநலம் பாதித்தவர் என்று மக்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.
வீடியோவைப் பதிவு செய்த நபர் ஸ்வாதிக்கு பொருத்தமான வேலையை வாங்கித்தர உதவி செய்வதாக கூறுகிறார்.
சுவாதியும் வேலை செய்ய விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
