Connect with us

    சாலையில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை, நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த மாணவிகள்; குவியும் பாராட்டுக்கள்…!!

    Tamil News

    சாலையில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை, நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த மாணவிகள்; குவியும் பாராட்டுக்கள்…!!

    சாலையில் கண்டெடுத்த ரூ.10 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவிகளை செம்பியம் இன்ஸ்பெக்டர் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.

    சென்னை பெரம்பூர் வீனஸ் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவிகள் பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆகியோர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றனர்.

    அப்போது சாலையில் கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் பையை எடுத்து பார்த்தனர்.

    அதில் ரூ.10 ஆயிரம் இருந்தது.

    உடனடியாக அதனை தங்களது பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் சுகந்தியிடம் காண்பித்துள்ளனர்.

    அவரும், மாணவிகளும், அந்த பணத்தை, செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதியிடம் ஒப்படைத்துள்ளனர்.

    இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கோமதி அந்த பள்ளிக்குச் சென்று, பணத்தை நேர்மையாக ஒப்ப்டைத்த  3 மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியரை பாராட்டினார்.

    அவர்களுக்கு சன்மானமாக 500 ரூபாய் பணம் கொடுத்து சிறப்பித்துள்ளார்.

    பணத்தை தவறவிட்டவர்கள் செம்பியம் காவல் நிலையத்தில், உரிய ஆதாரங்களுடன் தெரிவித்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!