Connect with us

    சிறுமியை க.ர்ப்ப.மாக்குவேன் என கானா பாடல் பாடிய புள்ளிங்கோவை தட்டி தூக்கிய போலீஸ்…!!

    Tamil News

    சிறுமியை க.ர்ப்ப.மாக்குவேன் என கானா பாடல் பாடிய புள்ளிங்கோவை தட்டி தூக்கிய போலீஸ்…!!

    சினிமா என்பது பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மட்டுமின்றி அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வரவழைக்கும் ஒரு சாதனம் என்றும் சொல்லலாம்.

    ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெண்களை கேலி செய்யும் வகையில் பாடல் மற்றும் வசனங்கள் இடம் பெறுகிறது.

    இதனால் சிறுவர்கள் கூட தவறான பாதைக்கு செல்லும் நிலை உருவாகிறது.

    இந்நிலையில், சரவெடி சரண், டோனி ராக் ஆகிய இரண்டு கானா பாடகர்கள் பாடிய பாடல் காணொலி ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது.

    அதில், சரவெடி சரண் என்பவர் பாடும் பாடல் வரிகள் மிகவும் பெண்கள், சிறுமிகள் குறித்து தரக்குறைவான வகையிலும், ஆபாசமாகச் சித்திரிக்கும் விதத்திலும் அமைந்திருந்தது.

    அத்துடன் 8-ம் படிக்கும் சிறுமியைக் கர்ப்பமாக்குவேன் அப்போ தான் அவ என்ன விட்டு போக மாட்டா’ என்ற ரீதியில் அவர் பாடிய பாடலுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புக் கிளப்பியது.

    இந்தக் காணொலி திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் கவனத்திற்குச் சென்ற நிலையில், சரவெடி சரணை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யலாம் என பரிந்துரை செய்யபட்டது.

    பாடகர் சரவெடி சரண் வீடு சென்னையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கக் உத்தரவிடப்பட்டது.

    குழந்தைகளை பா.லியல் ரீதியாக தவறாகச் சித்தரிக்கும் காணொலி பரப்புவதால் அவர் மீது 67-பி தொழில்நுட்ப பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    அதன்பின்னர், அவரிடம் இரண்டு மணிநேரம் விசாரணை மேற்கொண்ட பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கி எச்சரித்தார்.

    மேலும், சரணிடம் மன்னிப்பு கடிதம் பெற்று காவல் நிலைய பிணையில் அவரை விடுவித்தார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!