Tamil News
சிறுவனுடன் உல்லாசம் இருந்த மனைவியை, நேரில் பார்த்த, 5-வது கணவருக்கு நேர்ந்த விபரீதம்..!!
சேலம் மாவட்டம் , மேட்டூர் அருகேயுள்ள புதூர் பள்ளிக்கூடம் பகுதியை சேர்ந்தவர் செல்லவேல் லாரி டிரைவர்.
இந்நிலையில் கடந்த 7 ம் தேதி இரவு சம்பவத்தன்று செல்லவேல் வாய்க்கால் கரையில் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில்,
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த தங்கமாபுரி பட்டிணத்தை சேர்ந்தவர் கணவரை பிரிந்து வாழும் அழகம்மாள் என்பவருக்கும், செல்லவேலுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் செல்லவேலு ஓட்டி வந்த லாரியில் கிளீனராக பணிபுரியும் சிறுவனும், அழகம்மாளும் உல்லாசமாக இருந்ததை செல்லவேலு பார்த்து விட்டார்.
இதனால், செல்லவேலு சிறுவனை கண்டித்துள்ளார்.
இதனால் பயந்து போன அச்சிறுவன், செல்லவேலுவை நோட்டமிட்டு, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.
கொலை சம்பவம் தொடர்பாக செல்லவேலின் கள்ளக்காதலி அழகம்மாளிடம் துருவி துருவி விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியானது.
அழகம்மாளுக்கு ஏற்கனவே சரவணன், வேலு , ஆறுமுகம், விக்கி என்ற 4 பேருடன் திருமணம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதில், சரவணன் என்பவருடன் குடும்பம் நடத்தியதில் 3 குழந்தைகள் உள்ளன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
