Tamil News
சி.றுநீர.கங்கள் செ.யலி.ழந்து உ.யி.ரு.க்கு போ ராடும் ஆசிரியர் நலம் பெற கூட்டு பிரார்த்தனை செய்த மாணவிகள்…!!
உ.யிரு.க்கு போ.ராடும் ஆசிரியர் விரைவில் குணமடைய வேண்டி பள்ளி மாணவர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்த சம்பவம், பரமக்குடி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தோளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (32).
இவர் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஒரு மாதமாக உ.டல்ந.லக்.கு.றைவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதில் இரண்டு சி.றுநீர.கங்களும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
ஆசிரியர் ராஜசேகருக்கு தினமும் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ராஜசேகரின் பெற்றோர் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.
ராஜசேகரின் அம்மா பு.ற்றுநோ.யால் பா.திக்.கப்பட்ட நிலையில், அவருடைய தந்தையும் நீ.ரிழிவு நோ.யால் அ.வதி.ப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், உ.யி.ருக்கு போராடும் ராஜசேகர் குணமடைய வேண்டி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் நேற்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மேலும், இவருடைய சிகிச்சைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இச்சம்பவம் அங்குள்ளவர்களை மிகவும் நெ.கி.ழ்ச்சியில் ஆ.ழ்.த்தியது.
