Politics
“சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்” – அன்புமணி ராமதாசுக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள்..!!
தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் ஜெய் பீம் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
நடிகர் சூர்யா முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா.
படம் பார்த்த அனைவரும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறி அது தொடர்பான அறிக்கை ஒன்றை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜெய்பீம் படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, அமேசான் நிறுவனம் ஆகியவற்றுக்கு வன்னியர் சங்கம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது.
இதற்கிடையில் இப்படத்தில் வந்த ஒரு காட்சி குறிப்பிட்ட வன்னியர்கள் சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக அமைத்துள்ளது என சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் டி. ராஜேந்தர், சூர்யாவிற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் தவறான காட்சி இருப்பதாக கூறி இருந்ததால், அந்த காட்சி உடனே படக்குழுவினரால் நீக்கப்பட்டது.
அந்த முத்திரை இடம் பெற்றதற்கும் சூர்யாவுக்கும் சம்பந்தம் இல்லை.
இதனால் உங்கள் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இது நியாயம் இல்லை.
இந்த செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அரசியல், ஜாதி,மத,இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன் விளிம்பு நிலை மாணவர்கள் மீது அக்கறை கொண்டு கல்வி பணியாற்றும் சூர்யா அவர்களை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
