Viral News
“சொத்து மட்டும் வேணும்; ஆனா, சாப்பாடு தர மாட்டோம்” – 90 வயதான தாயை வீட்டை விட்டு வெளியே தள்ளிய மகன் மற்றும் மருமகள்; பசியால் வாடும் பரிதாபம்…!!
மயிலாடுதுறை அருகே 90 வயது மூதாட்டியை, பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டியடித்தனர்.
இதனால், கொட்டும் மழையில் உணவுக்காக அடுத்துவரிடம் கையேந்தும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், வாணாதிராஜபுரத்தை சேர்ந்தவர் தாவூத் பீவி.
90 வயதான இவர் கணவனை இழந்த நிலையில், தனது இளைய மகன் வீட்டில் வசித்து வந்தார்.
இளையமகன் சவுதியில் வேலை செய்து வரும் நிலையில், கடந்த மாதம், மூதாட்டியை, அவரது மருமகள் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.
இதனால் மூதாட்டி அதே ஊரில் வசிக்கும் மூத்த மகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவங்கும் அவரை ஏற்றுக் கொள்ளாததால், மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கும் அவரை ஏற்றுக் கொள்ளாமல் விரட்டி அடித்துள்ளனர்.
இதனால், கொட்டும் மழையில் மூதாட்டி, உணவுக்காக அடுத்தவர் வீட்டில் கையேந்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வானாதிராஜபுரம் ஊர் பஞ்சாயத்தார் கூறியதற்கும் மகன்கள் கேட்கவில்லை.
குவைத்தில் இருக்கும் அசரப்அலியும் என் வீட்டில் அவர் இருக்கக்கூடாது என்றார்.
மகன்கள் கைவிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் அளித்த உணவை உண்டுவந்தார்.
இந் நிலையில் மயிலாடுதுறையில் கடந்த மாதம் 4ஆம்தேதி மாவட்ட ஆட்சியரின் மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்டு தனது சொத்துக்களை தனது மகன்களிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் என ஆட்சியரிம் மனு அளித்துள்ளார்.
கொட்டும் மழையில் பெற்ற தாயை பரிதவிக்கவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
