Connect with us

    “டூவீலருக்கு போடும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பு” – அதிரடியாக முடிவெடுத்த முதல்வர்..!!

    Tamil News

    “டூவீலருக்கு போடும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பு” – அதிரடியாக முடிவெடுத்த முதல்வர்..!!

    நாட்டில் தற்போது வீட்டுக்கு வீடு இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் பெரும்பாலும் பெட்ரோலில் ஓட கூடியவை.

    சொற்பமான அளவிலே மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் பயன்பாடு உள்ளது.

    இந்த சூழ்நிலையில் பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது.

    இது சாமானிய மக்களிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்ததையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை முறையே  ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்து மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

    இதைப்பின்பற்றி,25 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி சற்று குறைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் இன்றி ஒரே விலையில் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில், புத்தாண்டு பரிசு அளிக்கும் வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

    இதனால், லிட்டருக்கு ரூ.98.48 விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலை அரசு அறிவிப்பின் படி ரூ.25 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.73.48- க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விலை குறைப்பு ஜனவரி.26 முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!