Viral News
தங்கத்தினாலான மாஸ்க்; விலைய கேட்டா உங்களுக்கு தலையே சுத்திடும்..!!
இந்தியாவில் கொரோனா பரவிய நாளில் இருந்தே மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதில் முதல் கட்டுப்பாடு அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பது தான்.
அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும், மீறி வந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
N 95, காட்டன் துணியாலான மாஸ்க், சர்ஜிக்கல் மாஸ்க் என பல வகைகள் உள்ள நிலையில் இந்தியாவில் நபர் ஒருவர் தங்கத்தால் செய்யப்பட்ட மாஸ்கை வாங்கியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கனஸ் என்ற மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே இந்த மாஸ்கை வாங்கியுள்ளார்.
15 நாட்களில் தயாரிக்கப்பட்ட 108 கிராம் எடை கொண்ட இந்த மாஸ்கின் விலை 5.7 லட்ச ரூபாயாகும்.
கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜை நிகழ்வின் போது, தான் தனித்து தெரியவேண்டும் என்பதால் இந்த மாஸ்கை அதிக விலை கொடுத்து செய்யச் சொல்லி வாங்கியிருக்கிறார்களாம்.
தற்போது இணையத்தில் இந்த தகவல் வெளியானதை பார்த்த சிலர் தங்கத்தில் மாஸ்க் அணிந்தால் கொரோனா வராதோ ?? என்று கேலி செய்தும் வருகிறார்கள்.
