Tamil News
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள, பெங்களூரில் இருந்து புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகன்; வாடகை இத்தனை லட்சமா..???
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக பெங்களூரிலிருந்து ரூ.5 லட்சத்தில் தனி ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு வந்த மகனின் செயல் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை அருகே உள்ள தென்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவரது மகன் சசிகுமார் திருப்பூரில் தனியார் கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தனது கம்பெனி வேலை தொடர்பாக சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த சசிகுமாருக்கு தந்தை சுப்பையா இறந்து விட்டதாக உறவினர்கள் சசிகுமாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சவுதி அரேபியாவிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார் சசிகுமார்.
இதனையடுத்து, பெங்களூரிலிருந்து சுமார் ரூ.5 லட்சம் வாடகை கொடுத்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்கினார்.
பின்னர், அங்கிருந்து தென்னங்குடிக்கு காரில் சென்று தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் திடீரென ஹெலிகாப்டரில் சசிகுமார் வந்து இறங்கியதால், இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தந்தைக்கு இறுதி காரியங்கள் செய்வதற்காக மகன் ஹெலிகாப்டரில் வந்த நிகழ்வு மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
