World News
தனது வீட்டின் கதவை பாம்பை கொண்டு பூட்டிய உரிமையாளர்…! என்ன காரணம் தெரியுமா..??
நம்மூரில், வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்றால், வீட்டின் உரிமையாளர் கோபத்தில் வீட்டை பூட்டி சாவியை கொண்டு சென்று விடுவேன் என கூறுவதுண்டு.
ஆனால், கென்யாவில் வீட்டில் குடியிருந்தவர்கள் வாடகையை சரியாக கொடுக்காத ஆத்திரத்தில் வீட்டு கதவை பாம்பை கொண்டு பூட்டிய வீட்டு உரிமையாளரின் செயல் ச.ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் கிட்டூயி நகரை சேர்ந்தவர் சாமுவேல் கியாகோ. இவருக்கு சொந்தமான வீட்டில் சிலர் வாடகைக்கு குடியிருந்தார்கள்.
அவர்கள் கடந்த செப்டம்பர் மற்றும் ஆக்டோபர் மாதத்திற்கான வீட்டு வாடகையை கொடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் கோபமடைந்த சாமுவேல் நேற்று முன் தினம் மதியம் பச்சைப் பாம்பை எடுத்து கொண்டு வந்து தான் வாடகைக்கு விட்ட வீட்டின் கதவை மூடி பாம்பை உள்ளே நுழைத்து பூட்டினார்.
இதன் மூலம் அந்த கதவை யாரும் திறக்கக்கூடாது என்றே சாமுவேல் இப்படி செய்தார்.
இதன்பின்னர் அந்த பாம்பை எப்போது வெளியில் எடுத்தார் மற்றும் வீட்டு வாடகை தொடர்பிலான விபரங்கள் வெளியாகவில்லை.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி விமர்சனங்களை சந்தித்துள்ளது.
