Connect with us

    தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..! நெல்லையில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு..!!

    Tamil News

    தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..! நெல்லையில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு..!!

    திருநெல்வேலியில் தனியார் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை கழிவறை சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் அன்பழகன் (9ம் வகுப்பு), விஸ்வ ரஞ்சன் (8ம் வகுப்பு), சுதீஸ் (6ம் வகுப்பு) ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சஞ்சய், இசக்கி பிரகாஸ், சேக் அபுபக்கர், அப்துல்லா ஆகியோர் படுகாயங்களுடன் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    100 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் தங்களது சக மாணவர்கள் உயிரிழந்த கோபத்தில் பள்ளியில் கற்களை கொண்டு எறிந்தும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியும் அப்பள்ளி மாணவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதனப்படுத்தி வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் விபத்து நடந்த பள்ளியை நேரில் பார்வையிட்டார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!