Connect with us

    தள்ளாத வயதில் சைக்கிளில் சென்று பொரி விற்று வாழ்க்கையை நடத்தும் 70 வயது முதியவர்; குவியும் பாராட்டுக்கள்..!!

    Viral News

    தள்ளாத வயதில் சைக்கிளில் சென்று பொரி விற்று வாழ்க்கையை நடத்தும் 70 வயது முதியவர்; குவியும் பாராட்டுக்கள்..!!

    மகாராஷ்டிரா மாநிலத்தில் முதியவர் ஒருவர் மசாலா பொரி விற்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

    படித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே, என வருந்தும் இளைஞர்கள் மத்தியில் ஒரு முதியவரின் வாழ்க்கை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன் உதாரணமாக உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி பாய். இவருக்கு வயது 70.

    தனியார் கம்பெனி ஒன்றில் வாட்ச்மேன் வேலை பார்த்து வரும் இவர், தனது குடும்பத்தினை காப்பாற்ற தனது வருமானம் போதாததால், காலையில் பொரி விற்று வருகிறார்.

    தினமும் மாலை 6- 8 வரை காந்தி பாக் பகுதிகளில் சைக்கிளில் சென்று மசாலா பொரி விற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

    இவர் தினமும் மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை நாக்பூரில் உள்ள காந்தி பாக் மற்றும் இட்வார் பகுதியில் சைக்கிளில் மசாலா பொரி விற்று வருகிறார்.

    அதன் பின்னர் வாட்ச்மேன் வேலைக்கு சென்று விடுகிறார்.

    ஜெயந்தி பாய் பொரி விற்கும் வீடியோவை அபினவ் ஜெஸ்வானி என்பவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ வைரலாகி  சுமார் 2 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர். மேலும் முதியவர் ஜெயந்தி பாய்க்கு தங்களதுபாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!