Connect with us

    தான் வளர்த்து வரும் எருமை மாடு மீது போலீசில் புகார் கொடுக்க வந்த விவசாயி; ஏன் தெரியுமா..???

    Tamil News

    தான் வளர்த்து வரும் எருமை மாடு மீது போலீசில் புகார் கொடுக்க வந்த விவசாயி; ஏன் தெரியுமா..???

    மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தன் எருமை மாடு பாலை கறக்கவிடவில்லை என்று கூறி போலீசில் புகார் அளித்த சம்பவம் அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபுல் ஜாதவ்.

    45 வயதான இவர் மாடுகளை வளர்த்து பால் கறவை செய்து விற்பனை செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வளர்த்த வரும் ஒரு எருமை மாட்டுடன் போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்றுள்ளார்.

    அங்கு போலீசாரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

    அதை படித்து பார்த்தும் அங்கிருந்த போலீசாருக்கு தலைசுற்றி இருக்கிறது.

    புகார் மனுவில் தான் வளர்க்கும் எருமை மாடு தன்னை கடந்த சில நாட்களாக பால் கறக்கவிடவில்லை எனவும், அந்த எருமை மீது நடவடிக்கை எடுத்து தன்னை பால் கறக்க அனுமதிக்கும்படி செய்ய வேண்டும்” என எழுதியிருந்தார்.

    இவரை எப்படி சாமளிப்பது என யோசித்த போலீசார் அவரை ஒரு கால்நடை மருத்துவரை சென்று பார்க்குமாறு அறிவுறுத்தி அனுப்பினர்.

    இந்நிலையில் அவர் இரண்டு நாட்களில் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் திரும்பி வந்தார்.

    அவர் வருவதை பார்த்தும் போலீசார் பதறினர். ஆனால் அவர் தன் மாடு தற்போது பால் கறக்க அனுமதிப்பதாக கூறி உதவிய போலீசாருக்கு நன்றி கூறினார்.

    தன் எருமை மாடு பாலை கறக்கவிடவில்லை என்று கூறி போலீசில் புகார் அளித்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!