Tamil News
தாயாக மாறிய தமிழச்சி; மனநிலை பாதிக்கப்பட்டவரின் மானம் காத்து உணவு ஊட்டி விட்ட நெகிழ்ச்சியான செயல்; குவியும் பாராட்டுக்கள்..!!
திருநெல்வேலி மாவட்டம்
கங்கைகொண்டான் பைபாஸ் சாலையில் நி.ர்வாணமாக மனநிலை சரியில்லாத ஒருவர் நடந்து வந்திருக்கிறார்.
அங்கு நின்ற சில மனிதர்கள் இவரை விரட்டி இருக்கிறார்கள்.
ஆனால் இவர் மனநிலை சரியில்லாத மனிதர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது.
அப்பொழுது அந்த வழியாக வந்த சகோதரி நந்தினி என்பவர் மனிதநேயத்துடன் நடந்து கொண்டார்.
அவர் நிர்வாணமாக இருந்ததை பொருட்படுத்தாமல் ஒரு சகோதரனாக எண்ணி அவரின் மானத்தைக் காக்க அவரிடம் வண்டியில் இருந்த அவருடைய சால்வையை அவருக்கு அணிவித்துள்ளார்.
பின்னர் அருகில் உள்ள கடையில் உணவு வாங்கி கொடுத்து அவரின் பசியையும் போக்கி மானத்தைக் காத்து, அவரையும் காப்பாற்றி இருக்கிறார்.
பொதுவாக மனநிலை பாதிக்கப்பட்ட நபர் என்றாலே தீண்டத்தகாதவர்களாக எண்ணி அருகில் செல்லவே கூச்சப்படும் நிலையில் ஒரு பெண்ணின் இத்தகைய செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இது சம்பந்தமான வீடியோ, சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து அப்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.
மனிதநேயத்துடன் செயல்பட்ட சகோதரியை பாராட்டுவோம்.
