Cinema
தாய்லாந்து நாட்டிற்குள் பிக்பாஸ் வனிதாவை விடமறுத்த குடியுரிமை அதிகாரிகள்; ஏன் தெரியுமா..???
தாய்லாந்து விமான நிலையத்தில் பிக்பாஸ் வனிதா விஜயகுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் காக்க வைக்கப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக சில படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்தது.
ஏற்கனவே 2 திருமணம், ஒரு காதல் ஆகியவற்றை கடந்து வந்த வனிதா பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ஓரிரு மாதங்களிலேயே இந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து வனிதா பழையபடி தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்
சமீபத்தில் தாய்லாந்து சென்றிருந்த வனிதா தலைநகர் பாங்காக் விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக வனிதாவை அதிகாரிகள் காக்க வைத்துள்ளனர்.
அதன்பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனிதாவை அதிகாரிகள் தாய்லாந்திற்குள் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வனிதான் விஜய்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,”இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தின் அதிகாரிகளின் செயல் தான் இது.
அவர்களுடைய தேவையில்லாத செயலால் நான் தாய்லாந்து விமான நிலையத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைக்கப்பட்டேன்.
தாய்லாந்து நாட்டில் இந்தியர்களுக்கு வருகைக்கு பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக நாம் தாய்லாந்து பாஸ் மட்டும் எடுக்க வேண்டும்.
அந்த பாஸ் என்னுடைய மொபைலில் இருந்தது. எனினும் அதனுடைய நகல் எண்ணிடம் இல்லை.
அந்த நகலை கொடுக்க வேண்டும் என்று மூன்று மணிநேரத்திற்கும் மேலாக என்னை காக்க வைத்தனர்.
நான் இந்தியாவிற்கு சென்று மீண்டும் இந்த பாஸை நகல் எடுத்து கொண்டு வரவேண்டும் என்று ஒரு அதிகாரி கூறினார்.
நான் தொடர்ந்து போராட்டம் நடத்திய பிறகு என்னை அனுமதித்தனர்” எனப் பதிவிட்டுள்ளார்
