Viral News
திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது 2 குழந்தைகளின் தாய் ஆசிட் வீச்சு…!!
திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது 2 குழந்தைகளின் தாய் ஆ.சி.ட் வீசிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பூஜாப்புரா பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான அருண்குமார்.
இவருக்கு 35 வயதான ஷீபா என்ற பெண்ணுடன் சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் சமூக வலைத்தளத்தின் மூலமாக தினமும் சாட்டிங் செய்து வந்துள்ளனர்.
அது அப்படியே காதலாக மாற இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஷீபாவுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது அருண்குமாருக்கு பின்னரே தெரிய வந்தது.
இதனால் ஷீபாவுடன் பேசுவதையும் அவரை தொடர்பு கொள்வதையும் அருண்குமார் தவிர்க்கத் தொடங்கியுள்ளார்,
இதனால் கோபமடைந்த ஷீபா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமாரிடம் வலியுறுத்தத் தொடங்கியுள்ளார்.
அதற்கு அருண்குமார் மறுக்கவே, அவரிடம் இருந்து ரூ 2 லட்சத்தைக் கேட்டு பிளாக்மெயில் செய்யத் தொடங்கியுள்ளார்.
இது குறித்துப் பேச கடந்த செவ்வாய்க்கிழமை அருண்குமார் வீட்டிற்கு ஷீபா சென்றுள்ளார்.
பேசிக்கொண்டிருக்கும் போதே மறைந்து வைத்திருந்த ஆ.சி.ட்.டை எடுத்து அருண்குமார் மீது வீசியுள்ளார் ஷீபா! இது அத்தனை அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
அக்கம்பக்கத்தினர் வந்து அருண்குமாரை பார்த்தபோது அவர் முகத்தில் எல்லாம் ஆ.சி.ட் காயம் ஏற்பட்டு, அவர் வ லியில் துடித்துக் கொண்டிருந்தார்.
இதையடுத்து உடனடியாக அவர் அடிமாலியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் சிகிச்சையில் அவரது ஒரு பக்க பார்வை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருண்குமாரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட போலீசார், ஷீபாவை அவரது கணவர் வீட்டில் இருந்து கைது செய்தனர்.
இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
