Tamil News
தீபாவளி கொண்டாடுவதற்காக விடிய விடிய தண்ணியடித்த மூவர் காலையில் உயிரிழந்த பரிதாபம்; ஏன் தெரியுமா?
தீபாவளி கொண்டாடுவதற்காக விடிய விடிய சரக்கடித்த மூவர் உ.யிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31), முருகானந்தம் (55), சக்திவேல் (61).
நண்பர்களான மூவரும் நேற்றிரவு தீபாவளியைக் கொண்டாடுவதற்காக இரவு நீண்ட நேரம் சரக்கடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலையும் 6 மணியளவில் மீண்டும் ஒரு முழுபாட்டில் பிளாக்கில் வாங்கியுள்ளனர்.
அருந்ததியர் வீதி அருகிலுள்ள பாழடைந்த கட்டடத்தில் அமர்ந்து 3 பேரும் மீண்டும் சரக்கடித்துள்ளனர்.
பின்னர் சக்திவேல் மட்டும் அந்த கட்டடத்தின் அருகில் அமர்ந்திருந்த நிலையில் ம.யங்கி விழுந்துள்ளார்.
முருகானந்தம் பாரதியார் சாலையில் ம.யங்கி விழுந்துள்ளார். இருவரையும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் வழியிலேயே உ.யிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.
மீண்டும் காலையில் பிளாக்கில் சரக்கு வாங்கிய நிலையில், யாரிடம் வாங்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
