Cinema
”துப்பாக்கி ஏந்திய 5 போலீசால் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது” – காடுவெட்டி குரு மகன் கனலரசன் எச்சரிக்கை
நடிகர் சூர்யா நடிப்பில் அவருடைய 2டி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 2ம் தேதியன்று வெளியானது.
ஞானவேல் இயக்கிய இப்படத்தில் மணிகண்டன், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
1995ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்று வன்னியர்களை அவமதித்து விட்டதாக இந்த படத்திற்கு எதிராகவும் சூர்யாவிற்கு எதிராகவும் வன்னிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் சூர்யாவுக்கு அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் அவரது வீட்டிற்கும் அவரது அலுவலகத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசு சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஜெய்பீம் பட விவகாரத்தை வன்னிய சமூக மக்கள், மிக பொறுமையாக அமைதியாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.
சூர்யாவின் வீட்டிற்கு 5 துப்பாக்கி ஏந்திய போலீஸார் காவலுக்கு நிற்கிறார்கள்.
1000 வன்னியர்கள் சென்றால் அந்த போலீஸாரால் என்ன செய்ய முடியும். போலீஸாரால் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது.
இயக்குநர் ஞானவேலையும் காப்பாற்றிவிட முடியாது. ஜெய்பீம் படத்தில் அந்த காட்சியில் காலண்டர் வைப்பதற்கான அவசியமே இல்லை.
வன்னிய சமூக மக்களை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் நடிகர் சூர்யா எந்த படத்திலும் நடிக்க முடியாது. எந்த படமும் எடுக்க முடியாது.
இயக்குநர் ஞானவேலும் தனது வீட்டை விட்டு வெளியே வர முடியாது என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
