Tamil News
நவம்பர் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு- முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் கல்வி கற்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்தது.
இதனால் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த 1-ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அல்லது ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்ததால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி எழுகின்றது.
இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் சற்றுமுன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி கேரள மாநிலத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மற்ற வகுப்புகளுக்கு நவம்பர் 15ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
