Politics
நாளை முதல் இவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்…!!
திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.5000 வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு., ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதைப்போல திருக்கோவில்களில் பக்தர்கள் அடிக்கும் மொட்டைக்கு பணம் வசூல் செய்யக்கூடாது என்று அறிவித்திருந்தார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்புகளுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து மொட்டையடிக்கும் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் மொட்டை அ.டிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பினால் மொத்தம் 1,749 ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த திட்டம் ஏற்கனவே செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் திருக்கோவில்களில் மொட்டை அ.டிக்கும் தொழிலாளர்களுக்கு மாத உதவித் தொகை 5,000 ரூபாய் திட்டத்தை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
