Tamil News
பட்டா மாறுதல் செய்ய ரூ.2000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது…!!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரூ.2000 லஞ்சம் வாங்கிய கண்ணாக்குடி கிராம நிர்வாக அலுவலர் மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் பெற்றபோது மலர்கொடியை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி சமயபுரம் அருகேயுள்ள புறத்தாக்குடியை சேர்ந்தவர் பெரியசாமி.
இவருடைய மனைவி தனபாக்கியம். இவருக்கு கடந்த 1999-ம் ஆண்டு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டது.
அந்த நிலத்தில் பெரியசாமி வீடு கட்டி உள்ளார். இந்தநிலையில் தனது இடத்துக்கு பட்டா கேட்டு சிறுகனூர் அருகே உள்ள கண்ணாகுடி கிராம நிர்வாக அதிகாரி மலர்க்கொடியிடம் (வயது 39), பெரியசாமி விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால், பட்டா வழங்க மலர்க்கொடி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பெரியசாமி இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி
பெரியசாமி நேற்று காலை, வி.ஏ.ஓ.,விடம், ரசாயனம் தடவிய 2,000 ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
அதை வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ., மலர்கொடியை கைது செய்தனர்.
