Tamil News
பள்ளியின் மாணவிகள் கழிவறையில் கேமரா பொருத்தி, தனது செல்போன் மூலம் பார்த்த காமுக ஆசிரியர்; அதிர்ச்சியில் மாணவிகள்..!!
கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றின் கழிவறையில் ஆசிரியர் ஒருவர் கேமரா பொருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பினராய் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று மதிய இடைவேளையின்போது மாணவிகள் தங்கள் கழிவறைக்கு போது அங்கு கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து அவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர்.
தலைமை ஆசிரியரும் ஒரு பெண் ஆசிரியை அனுப்பி கழிவறையில் கேமரா இருப்பதை உறுதி செய்ததை அடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதே பள்ளியில் ஆசிரியராக வேலை செய்துவரும் நவ்ஷாத் என்பவர் அந்த காமிராவை கழிவறையில் பொருத்தியது தெரியவந்தது.
காலையில் மாணவர்கள் வருவதற்கு முன் பள்ளிக்கு வந்த அவர் கழிவறைகளில் கேமராவை பொருத்திவிட்டு வகுப்பறையில் தனது செல்போன் மூலம் அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்து வந்தது தெரியவந்தது.
அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
