Tamil News
புள்ளிங்கோ ஸ்டைலில் கொத்தாக முடி வளர்த்து கொண்டு பள்ளிக்கு வந்த மாணவர்கள், இழுத்து பிடித்து ஒட்ட முடி திருத்தம் செய்த தலைமை ஆசிரியர்..!!
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் கல்வி கற்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்தது.
இதனால் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த 1-ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையி்ல், வேலூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் வந்த 100 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சொந்த செலவில் தலைமுடி திருத்தம் செய்தார்.
வேலூரில் உள்ள அரசு உதவி பெறும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 540 பேர் படித்து வருகின்றனர்.
அவர்களில் சிலர் லைன் கட்டிங், டாப் கட்டிங் போன்ற பல்வேறு முறைகளில் தலைமுடியை ஸ்டைலாக வளர்த்து வந்துள்ளனர்.
இதனால், தலைமை ஆசிரியர் நெப்போலியன், ஒ.ழுங்.கற்ற முறையில் நேற்று பள்ளிக்கு வந்த 100 மாணவர்களுக்கு 2 தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகத்திலேயே தலைமுடியை திருத்தம் செய்ய ஏற்பாடு செய்தார்.
இது குறித்து தலைமை ஆசிரியர் நெப்போலியன் கூறுகையில், ”பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி மாணவர்களுக்கு பெற்றோர் ஒத்துழைப்புடன் தலைமுடி திருத்தம் செய்யப்பட்டது.
நல்லொழுக்கம் பெற்று நல்ல மாணவர்களாக திகழவேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற பணியை தொடங்கினேன் என கூறினார்.
