Tamil News
மது வாங்க தந்தை டாஸ்மாக் சென்றதால், ரோட்டில் தனியாக நின்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர்..!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கீழ்நாட்டுகுறிச்சி கிராமத்தினை சேர்ந்தவர் முனுசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் தனது 11வயது மகளை அழைத்து கொண்டு எட்டயபுரம் சென்றிருந்தார்.
அங்கு காய்கறி மற்றும் பலசரக்கு பொருள்கள் வாங்கி விட்டு தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வரும் வழியில் மது வாங்க ஆசைப்பட்டு, முத்துலாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சற்று முன்பாக தனது டூவீலரை நிறுத்தி விட்டு, மகளை காத்திருக்க சொல்லி விட்டு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், தனியாக நின்று கொண்டு இருந்த சிறுமியை அப்பகுதி வழியாக வந்த குடிகார வாலிபர் ஒருவர் திடீரென சிறுமியின் வாய், மூக்கு மற்றும் முகத்தினை பொத்தி அருகில் இருந்த ஓடை பகுதிக்கு தூக்கி சென்றுள்ளான்.
இதனால், சிறுமி பயத்தில் கூச்சல் போட்டுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோர் அந்த இளைஞரை விரட்டி சென்று, சிறுமியை காப்பற்ற முயற்சி மேற்கொண்டனர்.
ஆனாலும், அந்த குடிகார இளைஞன் அவர்களை தாக்கி விட்டு சிறுமியை கொண்டு செல்வதில் முனைப்பாக இருந்துள்ளான்.
இதையெடுத்து அங்கிருந்தவர்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்து சிறுமியை மீட்டனர்.
இதையடுத்து பொது மக்கள் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்த அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்த முருகையா மகன் சுஜீவன் என்பதும், மது போதையில் இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுஜீவனை கைது செய்தனர்
