Connect with us

    மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பிரபல நடன இயக்குனர்; உதவிக்கு கெஞ்சும் மகன்..!!

    Cinema

    மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பிரபல நடன இயக்குனர்; உதவிக்கு கெஞ்சும் மகன்..!!

    பல படங்களில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றிய சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர்.

    இவர் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடன இயக்குனராகவும், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

    இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நுரையீரலில் வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், அவருடைய சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிப்பதாக அவரது இளைய மகன் சினிமா பிரபலங்களிடம் உதவி கோரியுள்ளார்.

    சிவசங்கர் மாஸ்டருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோரும் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இளைய மகன் அஜய் உடனிருந்து மூவரையும் கவனித்து வருகிறார்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!