Connect with us

    மழை வெள்ளத்தில் சிக்கிய 9 மாத கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்பு குழுவினர் ; குவியும் பாராட்டுக்கள்…!!

    Tamil News

    மழை வெள்ளத்தில் சிக்கிய 9 மாத கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்பு குழுவினர் ; குவியும் பாராட்டுக்கள்…!!

    சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த க.ர்.ப்பிணி பெண்ணை சென்னை காவல்துறை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    அதிலும் குறிப்பாக சென்னை தண்ணீரில் தத்தளித்து வருகிறது.

    ஓயாமல் பெய்து வரும் மழையால் மக்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

    பல சுரங்கப்பாதைகள் முழுவதும் நீரினால் முற்றிலும் மூழ்கிவிட்டது. அதுமட்டுமல்லாது பல்வேறு தடங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    மேலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இரு தினங்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

    இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் உள்ள AGS காலனி என்ற பகுதியில் ஜெயந்தி என்ற நிறைமாத க.ர்ப்.பிணி ஒருவர் மழை வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தார்.

    இதுகுறித்து வேளச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவலையறிந்த காவல்துறையினர் படகு ஒன்றின் மூலம் ஜெயந்தி மற்றும் அவரது கும்பத்தினர் மொத்தம் 4 பேரை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!