Viral News
மாநாடு பட வசனத்தை பிரியாணி கடை விளம்பரத்தில் வைத்த கடைக்காரர்; வைரலாகும் போஸ்டர்…!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான படம் மாநாடு.
இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மாநாடு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ். ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் வெகுவாக அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா பயன்படுத்திய ‘வந்தான்..! சுட்டான்..! போனான்..!ரிப்பீட்டு..!..முடியல தலைவரே..”என்ற வசனம் தற்போது ரொம்ப ஃபேமஸ்.
இந்த வசனத்தை மதுரையில் உள்ள பிரியாணி கடை ஒன்று விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரியாணி கடைக்காரர் அடித்துள்ள வால்போஸ்டரில்,
“வந்தாங்க..! சாப்பிட்டாங்க..! REP ‘eat U.. முடியல தலைவரே..”என்று மாற்றி வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் செம வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதை தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார்
