Tamil News
மாஸ்டர் செஃப் தமிழ் டைட்டிலை வென்ற தேவகி… பரிசுதொகை எவ்வளவு தெரியுமா??வெளியான நிலவரம்…!!
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர்செஃப், தற்போது இந்தியாவில் பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
முதலில் இந்தியில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் யாரும் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கிலும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கி நடத்தப்பட்டது.
தமிழில் சன் டிவி.,யில் இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதியும், தெலுங்கில் ஜெமினி டிவி.,யில் தமன்னாவும் தொகுத்து வழங்கி வந்தனர்.
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இது மக்களுக்கு ஆரம்பத்திலேயே பிடித்த நிகழ்ச்சியாக மாறியது. இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் இருந்தாலும் 10 பேர் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேறினர்.
கடைசி நான்கு இடங்களில் இருந்த போட்டியாளர்கள் இறுதிகட்டத்தில் மோதினர்.
இறுதிப் போட்டி நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் நடந்தன.
முதல் நான்கு இடத்தை பிடித்த தேவகி, வின்னி, கிருத்திகா, நித்தியா ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் சிறப்பான உணவை செய்து தேவகி முதல் இடத்தை பிடித்தார்.
இவர் இறுதி போட்டியில் 60 க்கு 54 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார்.
முதலிடத்தை பிடித்த இவருக்கு வாழ்த்துகள் குவிந்த தோடு மட்டுமல்லாமல் பரிசுத் தொகையாக ரூ 25 லட்சம் கொடுக்கப்பட்டது.
மேலும் ஷீல்டும் வழங்கப்பட்டது. இதனால் தேவகி தற்போது செம உற்சாகத்தில் இருக்கிறார்.
பல பிரபலங்களும், மக்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
