Connect with us

    மீண்டும் களத்தில் கு.தித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ், அண்ணாத்த படத்தை வாங்கி பழைய ஃபார்முக்கு திரும்பியது…!!

    Cinema

    மீண்டும் களத்தில் கு.தித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ், அண்ணாத்த படத்தை வாங்கி பழைய ஃபார்முக்கு திரும்பியது…!!

    கடந்த 2008 ஆம் ஆண்டு ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல தமிழ் படங்களை தயாரித்து வினியோகித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

    விஜய் நடித்த குருவி, சூர்யா நடித்த ஆதவன், 7ம் அறிவு, கமல்ஹாசன் நடித்த மன் மதன் அம்பு உள்ளிட்டவர்களை வைத்த தயாரித்த உதயநிதி, இது கதிர்வேலன்காதல், சரவண இருக்க பயமேன், கண்ணே கலைமானே, கெத்து, மனிதன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களில் உதயநிதியே நாயகனாக நடித்து தயாரித்துள்ளார்.

    சமீபத்தில் ஆர்யா நடிப்பில் அரண்மனை-3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றது.

    அரண்மனை 3 அக்டோபர் 14 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் அண்ணாத்த படத்தின் திரையரங்கு விநியோக உரிமையையும் ரெட் ஜெயண்ட் வாங்கியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள்
    வெளியாகி உள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் அண்ணாத்த படத்தின் திரையரங்கு விநியோக உரிமையையும் ரெட் ஜெயண்ட் வாங்கியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் உலவுகின்றன.

    உதயநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்ணாத்த போஸ்டரை பகிர்ந்திருப்பது, இந்த வதந்திக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!