Connect with us

    முதல்வர் ஸ்டாலின் இப்படி செய்வார் என நான் நினைக்கவில்லை, ஆச்சரியமாக இருக்கிறது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…!!

    Politics

    முதல்வர் ஸ்டாலின் இப்படி செய்வார் என நான் நினைக்கவில்லை, ஆச்சரியமாக இருக்கிறது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…!!

    முதல்வர் ஸ்டாலின் சென்னை விமானநிலையத்தில் ஆளுநர் என்ஆர் ரவியை வரவேற்று இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

    அதன்படி, நேற்றைய தினம் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் டிஜிட்டல் தொடுத்திரைத் தொலைக்காட்சி தொடக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:

    “சமூகநீதி நாள் என ஒரு அரசு அவர்கள் சார்ந்த சித்தாந்தத்தின்படி கொண்டாடுவதில் தவறில்லை.

    ஆனால், எங்களை பொறுத்தவரை சமூகநீதியை பாஜகவில் தான் பார்க்கிறோம். செக்கிழுத்து எண்ணெய் தொழில் செய்த குடும்பத்தில் பிறந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மோடி பிரதமராக வந்திருக்கிறார்.

    திராவிட கட்சிகள் சமூகநீதி என பேசுவதை உண்மையாக பாஜக செய்கிறது.

    மற்ற தலைவர்கள் பற்றி தவறாக பேசுவது பாஜக டிஎன்ஏவிலேயே அப்படி கிடையாது.

    ஆளுநர் என்பது அரசியலைமைப்பு சட்டத்தால் நியமிக்கப்பட்டது.

    2017-ல் இருந்து பாதுகாப்பு சவாலாக இருந்த நாகாலாந்த் பகுதியில் தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

    இதில் ஆர்என் ரவி சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, அந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தவர்.

    அதனால், அடுத்த முக்கிய மாநிலமான தமிழகத்திற்கு குடியரசு தலைவர் என்ஆர். ரவியை ஆளுநராக நியமித்திருக்கிறார்.

    ஆனாலும், முதல்வர் ஸ்டாலின் சென்னை விமானநிலையத்தில் ஆளுநர் என்ஆர் ரவியை வரவேற்று இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என கூறினார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!