Connect with us

    “லாட்ஜ்ல கல்யாணம், கார்ல முதலிரவு” – பல பெண்களின் வாழ்வில் விளையாடிய ஒரு போலீஸ்காரர்..!!

    Viral News

    “லாட்ஜ்ல கல்யாணம், கார்ல முதலிரவு” – பல பெண்களின் வாழ்வில் விளையாடிய ஒரு போலீஸ்காரர்..!!

    கல்யாண வெப்சைட் மூலம் பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த ஒரு ஆயுதப்படை போலீசை காவல் துறையினர் தேடி வருகின்றனர்

    கர்நாடகாவின் பெல்காமில் உள்ள கும்பத்கிரியில் வசிக்கும் பிரசாந்த் பௌராவ் பாட்டீல் என்ற 31 வயதான நபர் ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார்.

    அவர் திருமண வெப்சைட்டில் பல பெண்களிடம் தன்னை ஆர்மி ஆபீசர் என்று பொய் சொல்லி ஏமாற்றி கல்யாணம் செய்துவிட்டு ,உறவாடிவிட்டு தலைமறைவாகி விடுவார் .

    அதன் படி அவர் ஒரு பெண்ணை ஒரு கல்யாண் வெப் சைட் மூலம் தொடர்பு கொண்டார்.

    பிறகு அந்த பெண்ணும் பாட்டீலும் நவம்பர் 18 அன்று தக்துஷேத் கணபதி கோவிலில் சந்தித்தனர்.

    அப்போது அவர் ஆயுதப்படை சீருடையில் இருந்தார்.

    பின்னர் அந்த இருவரும் சிங்ககாட் சாலையில் உள்ள லாட்ஜில் திருமணம் செய்து கொண்டனர்.

    அதன் பிறகு அவர்களின் முதலிரவை தனது காரில் அந்த பெண்ணுடன் வலுக்கட்டாயமாக முதலிரவு  கொண்டாடிவிட்டு ,அங்கிருந்து தலை மறைவாகிவிட்டார்.

    அதன் பிறகு அந்த பெண் பலமுறை அவரை தொடர்பு கொள்ள போன் செய்த போது அவர் அந்த பெண்ணின் போனை ப்ளாக் செய்து விட்டார்.

    இதனால் அந்த பெண் அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த போது அவர் இது போல பலரை ஏமாற்றியதை கண்டுபிடித்தனர்.

    மேலும் அவர் 2018 முதல் ஆயுதப்படையிலிருந்து தலைமறைவாகி விட்டதாகவும் ,அவர் மீது புனே, லத்தூர் மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களில் 2018 முதல் இந்த ஆண்டு நவம்பர் 20 வரை ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் போலீசார் கூறினர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!