Connect with us

    வளர்ப்பு நாய் சில்க் ஸ்மிதாவு க்கு வெகு விமரிசையாக வளைகாப்பு நடத்திய குடும்பம்; ஆச்சரியமடைய வைத்த செயல்…!!

    Viral News

    வளர்ப்பு நாய் சில்க் ஸ்மிதாவு க்கு வெகு விமரிசையாக வளைகாப்பு நடத்திய குடும்பம்; ஆச்சரியமடைய வைத்த செயல்…!!

    சிலுக்கு என்ற கர்ப்பிணி நாய்க்கு உறவினர்களை அழைத்து வெகு விமரிசையாக வளைகாப்பு நடத்திய தம்பதிகளின் செயல் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள உப்புக்கோட்டையில் வசித்து வருபவர் குமரேசன்.

    இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், தமிழ்ச்செல்வன் என்ற மகனும் கல்பனா தேவி என்ற மகளும் உள்ளனர்.

    மகனுக்கும், மகளுக்கும் சிறுவயதிலிருந்தே செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆசை. தங்களின் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தங்கள் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகின்றனர்.

    இதில் நாட்டு நாய், பொம்மரேனியன், கோம்பை, லேபர் டாக், சிப்பிபாறை, போன்ற ரகங்களின் பெண் நாய்களை வளர்த்து வருகின்றனர்.

    ஒவ்வொரு நாய்க்கும் செல்லப்பெயர்கள் இட்டு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில் தெருவோரம் சுற்றித்திரிந்த ஒரு நாயை வீட்டிற்கு எடுத்து வந்து அந்த நாய்க்கு சிலுக்கு என பெயர் வைத்ததுடன் தங்களது வீட்டில் வைத்து வளர்த்து மூன்று வருடங்களாக பாதுகாத்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த நாய் க.ரு.வு.ற்று இருப்பதை கால்நடை மருத்துவர் மூலம் அறிந்தனர்.

    இதனால் வீட்டில் பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல சிலுக்கு என்ற நாய்க்கு வளைகாப்பு வைத்து பெண்களுக்கு நடத்துவது போலவே நாய்க்கு பிடித்த உணவான எலுமிச்சை, புளி சாதம், தயிர் சாதம், பொங்கல், கேசரி உள்பட 5 விதமான உணவுப் பொருட்கள் செய்து நாய்க்கு கொடுத்து , புது சேலை மற்றும் மாலைகள் அணிவித்து தாயின் கால்களில் வளையல்கள் மாற்றி அதன் முகத்தில் சந்தனம் குங்குமம் வைத்து உறவினர்கள் அனைவருக்கும் வரவழைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை ஆச்சரியமடைய வைத்தது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!