World News
விதவை பெண்ணை 2-வது மனைவியாக மணந்த கட்டிட தொழிலாளி; ஆனால், அந்த பெண்ணுக்கு பெயிண்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்; விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைந்த 2-வது கணவர் என்ன செய்தார் தெரியுமா???
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நாளபெட்ட அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன் (56). கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது முதல் மனைவி ரத்தினம்மா இறந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
இதனிடையே லட்சுமணனின் தம்பியும் இறந்து விடவே, மூன்று குழந்தைகளுடன் விதவையான இருந்த அவரது மனைவி சிவகாமி, 41, என்பவரை லட்சுமணன் இரண்டாவது திருமணம் செய்து விட்டார்.
இந்நிலையில், ஓசூர் அடுத்த வெங்கடேஷ் நகர் பகுதியில் வசித்து வரும் பெயிண்டர் சதீஷ்(32)க்கும் சிவகாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடையில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததையடுத்து சிவகாமி மற்றும் சதீஷை கண்டித்துள்ளார்.
ஆனால், அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
இதனால், சதீஷை கொலை செய்ய தனது நண்பர் டிரைவர் மகேந்திரனுடன் சேர்ந்து லட்சுமணன் திட்டம் போட்டார்.
அதன்படி நேற்றிரவு லட்சுமணன், மகேந்திரன் ஆகியோர் சதீஷை மது அருந்த வருமாறு அழைத்துள்ளார்.
அதன்படி நாளபெட்ட அக்ஹாரம் பகுதியில் அமர்ந்து லட்சுமணன் பார்த்திபன், மகேந்திரன் சதீஷ் ஆகியோர் மது அருந்தினர்.
அப்போது வட்சுமணனுக்கும் சதீஷிற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலை உடைத்த லட்சுமணன், சதீஷ் கழுத்தில் குத்தினார்.
இதில், சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
