Tamil News
வியாபாரியின் மகள் ஐஏஎஸ் தேர்வில் 3-ம் இடம் பிடித்து சாதனை..!!
ஊட்டி வியாபாரியின் மகள், ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழத்தில், மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் தியாகராஜன் – லட்சுமி தம்பதியினரின் மூத்த மகள் சுவாதிஸ்ரீ. இவர் பள்ளிப் படிப்பை ஊட்டியில் முடித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் தியாகராஜன், வியாபாரி. இவரது மனைவி லட்சுமி, அஞ்சலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர்களது மூத்த மகள் சுவாதி ஸ்ரீ (வயது24). இவர் தனது பள்ளிக் கல்வியை ஊட்டி, குன்னூரில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்து முடித்தார். பின்னர் தஞ்சாவூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. வேளாண்மை பட்டப்படிப்பு படித்தார்.
அதன் பின்னர் இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்காக படித்து வந்தார். இதற்காக சென்னையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்றார்.
கடந்த ஆண்டு இந்திய ஆட்சி பணிக்காக நடந்த தேர்வை சுவாதி ஸ்ரீ எழுதினார். அந்த தேர்வின் முடிவுகளை மத்திய ஆட்சி பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த 24-ந் தேதி வெளியிட்டது.
இந்த தேர்வில் சுவாதிஸ்ரீ, தேசிய அளவில், 126வது இடத்தையும், மாநில அளவில், 3-ம் இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
தனது சாதனை குறித்து, சுவாதி ஸ்ரீ கூறுகையில்,
நான் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்காக 2 ஆண்டுகளாக கடின முயற்சியுடன் படித்து வந்தேன்.
முதலில் எழுதிய தேர்வில் தோல்வி அடைந்தேன். அப்போது பெற்றோர்கள் எனக்கு நம்பிக்கை அளித்தனர். இதன் மூலம் 2-வது முறையாக முழு நம்பிக்கையோடு தேர்வு எழுதியதில் தேர்ச்சி பெற்றேன். இந்த வெற்றிக்கு எனது பெற்றோர் முக்கிய காரணம் என்றார்.
சுவாதிஸ்ரீ அப்பா தியாகராஜன் கூறுகையில்,”ஊட்டியில் சிறிய கடை வத்து வியாபாரம் செய்து வந்தேன்.
எங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக, சில ஆண்டுகளுக்கு முன், கோவை சென்றேன். அதற்கான பலன் கிடைத்ததால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது,” என்றார்.
