Cinema
விரைவில் உன்னை வந்து சந்திக்கிறேன்” – விபத்தில் உ.யி.ரி.ழந்த தோழிக்கு உருக்கமான மெசேஜ் பதிவிட்ட நடிகை யாஷிகா ஆனந்த்…!!
கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் யாஷிகா ஆனந்த், இறந்த தனது தோழி பற்றி மிகவும் எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
துருவங்கள் பதினாறு என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் இவருக்கென்று எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஒருசில படங்களில் ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும், ஒரு பாடலுக்கு நடனம் என்றும் தொடர்ந்து நடித்து வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்தது யாஷிகா ஆனந்தை பெரிய அளவில் ஹிட் ஆக்கியது.
அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்த நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு இரவு, கிழக்குக் கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது இவரது கார் விபத்தில் சிக்கியது.
இதில் இவரது தோழி பவானி விபத்து நடந்த இடத்திலேயே ப.லி.யானார். இதில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்திற்கு ஆப்ரேசன் முடிந்துள்ளது.
”என்னுடைய பெரிய நலன்விரும்பி மற்றும் எனது Soul Sister. ஐ மிஸ் யூ. உன்னை நினைக்காமல் ஒரு நாள் கூட கடத்ததில்லை. மீண்டும் அந்த நேரத்திற்கு சென்று நடந்ததை மாற்ற முடியுமா என நினைக்கிறேன். உன்னை அந்த அளவுக்கு மிஸ் செய்கிறேன்.”
“எங்களை விட்டு செல்லும் முன்பு நீ கொடுத்துவிட்டு சென்ற நியாபகங்கள்.. அவற்றிற்காக நான் நன்றி கடனை பட்டிருக்கிறேன். நீ இப்போது ஒரு ஏன்ஜல். நீ ஒரு மாணிக்கம், உன்னை நான் உடைத்துவிட்டேன். உன்னையும் நம் நியாபகங்களையும் நான் மிஸ் செய்கிறேன்.”
“நீ இப்போது இங்கு இல்லை என்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது. நீ என்னிடம் உணவு, டெசர்ட் பற்றி பேசுவதை நான் மிஸ் செய்கிறேன், உனக்கு மேக்கப் செய்து விடுவதையும் நான் மிஸ் செய்கிறேன்.
இப்படி அனைத்தையும் மிஸ் செய்கிறேன். நீ நல்ல இடத்தில் இருப்பாய் என நம்புகிறேன், உன்னை விரைவில் வந்து சந்திக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
