Connect with us

    “வெறும் 9மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்..!!

    Politics

    “வெறும் 9மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது” – பிரதமர் மோடி பெருமிதம்..!!

    257 நாட்களில் 100 கோடி கொரோனா டோஸ்களை செலுத்தி சாதனை புரிந்துள்ளோம், மக்களின் ஒத்துழைப்பு காரணமாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கோவி ஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக மத்திய அரசு வழங்கியது.

    இந்தியாவில் இதுவரை 100 கோடி டோஸ்களுக்கும் அதிகமான வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. 100 கோடி மைல்கல்லை இந்தியா நேற்றுதான் எட்டியது.

    இந்தியாவில் இதுவரை 71,09,80,686 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

    அதேபோல் 29,53,02,676 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

    இந்தியாவின் இந்த வேக்சின் சாதனை சர்வதேச நாடுகளை வியக்க வைத்துள்ளது. வெறும் 9 மாதங்களில் இந்தியா இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளது.

    இது குறித்து இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அதில்,
    அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.

    தடுப்பூசி செலுத்துவதில் எந்த விஐபிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை.

    விஐபி கலாச்சாரத்தை ஒ.ழித்.துள்ளோம். இந்தியாவின் சாதனைக்கு பின் 130 கோடி மக்களின் சக்தி அடங்கியுள்ளது என குறிப்பிட்டார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!